ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

நான் மட்டுமா! என் அம்மாவும் தொடையை காட்டுவாங்க: ப்ரியங்கா சோப்ரா

10:29 காலை

இந்திய பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் ஜெர்மனி சுற்றுப்பயணம் செய்தபோது, அங்கு ‘பே வாட்ச்’ திரைப்படத்தின் புரமோஷனுக்கு சென்றிருந்த பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பெர்லின் நகரில் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ப்ரியங்கா சோப்ரா குட்டை கவுன் அணிந்து தொடை தெரியும் வகையில் பிரதமர் முன் உட்கார்ந்ததோடு, கால்மேல் கால் போட்டும் உட்கார்ந்திருந்தார்

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியபோது ப்ரியங்காவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரதமர் என்ற பதவிக்கு மரியாதை கொடுக்காமல் அவர் முன் கால்மேல் கால் போட்டு உட்காருவது கண்டிக்கத்தக்கது என்று டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்தனர்

இந்த விமர்சனங்களுக்கு ப்ரியங்கா சோப்ரா நேரடியாக பதில் கூறாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ப்ரியங்காவும், அவருடைய அம்மாவும் தொடை தெரியும் வகையில் உடை அணிந்திருந்தனர். இது எங்கள் ரத்தத்தில் உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டு விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393