செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

பிரதமர் மோடியை ஜெர்மனியில் சந்தித்த விஜய் பட நடிகை

04:00 மணி

இந்திய பிரதமர் மோடி 4 நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று டெல்லியில் இருந்து கிளம்பினார். இன்று காலை அவர் ஜெர்மனியை அடைந்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும் விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தில் நடித்தவருமான ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘பே வாட்ச்’ படத்தை புரமோஷன் செய்ய ஜெர்மனி சென்றிருந்தார். பிரதமர் மோடியும் ஜெர்மனி வந்திருப்பதை அறிந்து அவரை சந்திக்க நேரம் கேட்டபோது அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

இன்று காலை மோடி-ப்ரியங்கா சோப்ரா சந்திப்பு ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து ப்ரியங்கா கூறியபோது, ‘தனக்காக நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி. எதிர்பாராத இந்த சந்திப்பு தனது மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது’ என்று கூறியுள்ளார்

(Visited 4 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393