நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்ட நிலையில் பல நாடுகள், ஊர்கள், தீவுகள் என இந்த ஜோடி ஜாலியாக சுற்றி வருகிறது.

முதன் முதலில் நிக் ஜோனஸ் தான் பிரியங்காவுக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ் மூலம் செய்திகளை அனுப்பினாராம்.அதன் பிறகு தீவிரமாக பழக தொடங்கிய உடன் , மீடியாக்கள் பலவற்றில் வந்த இவர்களின் காதல் கிசு கிசு செய்திகளே நாம் ஏன் உண்மையாக காதலிக்க கூடாது என இவர்களை காதலிக்க வைத்து விட்டதாம்.