வட இந்திய சினிமா பத்திரிக்கைகளிலும், ஆங்கில பத்திரிக்கைகளிலும் அதிகம் இடம் பெறுவது நிக் ஜோனஸ்,பிரியங்கா சோப்ரா. தன்னை விட பத்து வயது இளமையான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை பிரியங்கா காதலித்தாலும் காதலித்தார் வட இந்திய ஊடகங்களால் செய்தி போட்டு முடியவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  காதலர் நிக் ஜோனசுடன் சிங்கப்பூரில் பிரியங்கா சோப்ரா

அந்த அளவுக்கு பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ், எங்கு சென்றாலும் அவர்கள் தடுக்கி விழுந்தாலும் தலைப்பு செய்தியாகிறார்கள்.இது போல் அமெரிக்க பத்திரிக்கைகளிலும் இந்த ஜோடி பற்றிதான் பேச்சு அதிகம்.

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்சின் ப்ரோக்ராம் செட்யுல் எல்லாம் அவர்களை விட பத்திரிக்கைகளுக்குத்தான் அதிகம் தெரிவது போல எங்கு சென்றாலும் இந்த ஜோடியை பத்திரிக்கைகள் விடுவதில்லை.

இதையும் படிங்க பாஸ்-  இவ்வளவு கவர்ச்சியா? பிரியங்கா சோப்ராவா இது?...

சமீபத்தில் இத்தாலியில் கொமோ ஏரியில் நடந்த முகேஷ் அம்பானியின்மகள் இஷா அம்பானியின் நிச்சயதார்த்த விழாவில் நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ரா ஜோடி கலந்து கொண்டதுதான் இன்றைய வட இந்திய ஹிந்தி மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளின் ஹாட் டாபிக்.