பிரபல அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனஸ், தமிழில் விஜயுடன் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. தமிழில் நடித்த பின் அதிகமான பாலிவுட் படங்களில் நடித்து இப்போது பாலிவுட்டையும் மறந்து ஹாலிவிட்டில் நடித்து வருகிறார் அங்கு நடித்து வரும்போது தன்னை விட பத்து வயது குறைந்த இளம் பாடகர் நிக் ஜோனசுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

சமீபத்தில் இந்தியா வந்த இந்த ஜோடி அம்பானி வீட்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டது.

இந்நிலையில் ப்ரியங்காவின் 36வது பிறந்த நாளை கடந்த வாரம் லண்டனில் கொண்டாடியபோது இருவரும் மோதிரம் மாற்றி என்கேஜ்மெண்ட் நடந்தது என தெரிகிறது.

இதற்காக நிக் ஜோனஸ் நியூயார்க்கில் உள்ள டிஃபானி என்ற புகழ்பெற்ற ஸ்டோரில் மோதிரம் வாங்கியதாகவும் இரண்டு மாதத்திற்கு பின் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் தெரிகிறது.