கோலிவுட் திரையுலகில் இருந்து ஹாலிவுட் திரையுலகம் வரை வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய துரதிஷ்டமான நிலை இருப்பது குறித்து அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்வதாக பிரபல பாலிவுட் நடிகையும், விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

ஆரம்பகட்டத்தில் தன்னையும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு ஒருசிலர் கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் பிரியங்கா சோப்ரா திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்

மேலும் சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் வாய்ப்புக்காகவும், புரமோஷனுக்காகவும் படுக்கையை இருபாலரும் பகிர்ந்து கொள்ளும் அவலம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.