பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் சிக்கிய வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீரவ் மோடியின் வைர நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. எனினும் அவர் இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும், இந்த விளம்பர தூதர் பதவியில் இருந்து சட்டப்படி விலக அவர் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

நீரவ் யாதவ், பிரியங்கா சோப்ராவுக்கு பல கோடி சம்பள பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.