வேலைக்காரியாக விருப்பம் தெரிவித்த பிரியங்கா சோப்ரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாக வேண்டும் என பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் கூறியது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் சென்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பல நடிகைகள் ஹாலிவுட்டில் தாக்கு பிடிக்காமல் பாலிவுட்டிற்கு திரும்பி வந்து விட, பிரியங்கா மட்டும் அங்கு டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் வெயின் ஜாக்சனோடு அவர் நடித்த பே வாட்ச் படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. வசூல் ரீதியாக அப்படம் சரியாக போகவில்லை என்றாலும், அப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் நடிப்பு அங்கு பலருக்கும் பிடித்திருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வேலைக்காரியாக தான் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். வீட்டை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் விடுவது போன்ற வேலைகளை செய்யும் ஒரு வேலைக்கார பெண்ணாக இருக்கவே தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இது நடக்கிறதோ இல்லையோ, அவர் கூறிய செய்தி இணையத்தில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.