பிரியங்கா சோப்ரா காதலித்து வருவதும் அதுவும் தன்னைவிட பத்து வயது இளமையான பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயங்களே. இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் நிக் ஜோனஸ் நடத்திய மியூசிக் கான்செர்ட்டில் இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்ததும் இருவரும் கை கோர்த்து வருவதையும் தனது இன்ஸ்டாகிராம், மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருப்பதை பாலிவுட் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.