Bigg boss Season 3 – ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான புரோமோ வீடியோக்களும் வெளியாகி வருகிறது.

இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, 90 எம்.எல். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரபல விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள இருக்கிறீர்களா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.