தனுஷ் நடித்து இயக்கிய ‘பவர்பாண்டி’ படத்தில் ஏற்கனவே பிரபல விஜே டிடி நடித்துள்ள நிலையில் விஜய் டிவியின் இன்னொரு பிரபல விஜேவான ப்ரியாங்கா சமீபத்தில் தனுஷை நேரில் சந்தித்துள்ளார்.

தனுஷூடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ப்ரியங்கா, ‘தனுஷை சந்தித்ததால் தனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தில் ப்ரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.