கர்நாடகா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தோ்தல் இன்று நடைபெற்றது. கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையா அரசின் பதவிக்காலம் முடிவைடைய இருப்பதையொட்டி கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் நடைபெற்று வருகிறது. அதில் கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த நடிகை பிரணீதா வாக்களித்தார்.

கர்நாடகத்தில் 224 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்தில் 222 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. வாக்குப் பதிவு இன்று அதிகாலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.30 மணிக்கு முடிவடைந்தது. 55 ஆயிரத்து மேற்பட்ட வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கன்னட நடிகர் நடிகைகள் அனைவரும் வாக்களித்து வருகிறார்கள். சகுனி மற்றும் மாஸ் படத்தில் நடித்த நடிகை பிரணீதா வாக்களித்துள்ளார். வாக்கு அளித்து விட்டு வந்த பின்பு விரலில் மை வைக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் பிரணீதா.