அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என சர்ச்சைக்குறிய வகையில் பேசியது அதிமுக வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

திண்டுக்கல் சீனிவாசன் எந்த தைரியத்துல ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என்று பேசியிருப்பாரு? பேச வரலைன்னா அமைதியாக இருந்துடணும். இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி வெச்சுட்டு நம்மையும் தர்ம சங்கடத்துல மாட்டி விடுறாங்க என ஆளும் தரப்பு ஆதங்கத்தில் உள்ளதாக பேசப்படுகிறது.

இவங்க இப்படித்தான் பேசுவாங்கன்னு தெரிஞ்சுதான் ஜெயலலிதா இருந்தவரைக்கும் யாரையும் வாயே திறக்க விடாமல் வெச்சிருந்தாங்க. இப்போ பேச ஆரம்பிச்சதும் பிரச்னை ஆரம்பிச்சிருச்சு என கூறிய அதிமுக தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மீதும் இப்போ நாம நடவடிக்கை எடுத்துதான் ஆகணும் என்பதில் உறுதியாக உள்ளதாம்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தவறு. அவர் பேசிய வீடியோவை பார்த்து பார்த்து மக்கள் சிரிக்கிறாங்க. நாம அமைதியா இருந்தா நாமளும் அவர் சொல்வதை வழிமொழிவதாக ஆகிவிடும். திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும் என அதிரடிக்கு தயாராகிவிட்ட அதிமுக பல்வேறு மாவட்ட செயலாளர்களையும் மாற்றி டபுள் அதிரடிக்கு கிளம்பிவிட்டது.