நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலுக்கு முழு ஆதரவு கொடுத்த நடிகர் வடிவேலு மீது அதே விஷால் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கம் தடட விதிக்க ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வரும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2 படத்தில் தொடர்ந்து தன்னால் நடிக்க முடியாது என்று வடிவேலு கூறியிருக்கும் நிலையில் இதுகுறித்து ஷங்கரின் தரப்பில் இருந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2 படத்தில் நடிக்கவில்லை என்றால் அவர் மீது தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அப்படி தடை விதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வடிவேலு தயாராகி வருவதாக கூறப்படுகிறது