தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்தது

தமிழ் பட சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை தொடங்கி, மாலை முடிவடைந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த தேர்தல் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டன. இன்று காலை சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் இதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, ராதிகா சரத்குமார், ரா. பார்த்திபன், நாசர். பி.வாசு உள்ளிட்ட பல சினிமா தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தற்போது விஷால் அணியினர் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.