சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக திட்டமிட்டுள்ள நிலையில் ஸ்டிரைக்கை காரணம் காட்டி இந்த படத்திற்கு சென்சார் செய்ய அனுமதி கடிதம் வழங்குவதற்கு தயாரிப்பாளர் சங்கம் தாமதம் செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படினும், ‘காலா’ படத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி பெறவதற்காகவே ஏற்பட்டது என்று கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் ‘காலா’ படத்திற்கான அனுமதி கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் அளித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி காலா திரைப்படம் ஏப்ரல் 27ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது