பிரபல தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் இவரது எம்.ஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி சேகர் எம்.ஜி சந்தானம் இருவரும் இணைந்து தயாரித்த படங்கள் பல

அதில் பாசில் இயக்கி இளையராஜா இசையமைத்த கிளிப்பேச்சு கேட்கவா , விஜயகாந்த் ரவளி நடித்த திருமூர்த்தி படமும் முக்கியமான திரைப்படங்களாகும்.

மேலும் தாய்மாமன் , சிவசக்தி உள்ளிட்ட படங்களையும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த எம்.ஜி.சேகர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்