‘தல’ அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படமானது அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என பல மாதங்களுக்கு முன்பே தெரிவித்தது. மேலும், இப்படமானது சோலோவாக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக திடீரென அறிவித்தது. இதனால், ‘விஸ்வாசம்’ படம் ரிலீசாகும் தேதி தள்ளிப்போவதாக வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.தியாகராஜன் சமீபத்திய பத்திரிக்கை தொடர்பில் ‘விஸ்வாசம்’ கண்டிப்பாக பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என்றும், படம் தள்ளிப்போவதாக கூறப்படும் வதந்திகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வலியுறுத்தியதைப் போலவே, விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் உரிமையாளர்கள் அனைவரும் ‘ஓப்பனிங் கிங்’ தல அஜித் படத்தை திரையிட ஆர்வமாக உள்ளனர்.

இப்படத்தில் அஜித், நயன்தாரா ஜோடிகளாகவும், இவர்களுடன் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, விவேக், ரமேஷ் திலக் ஆகியோருடன் மற்ற நடிகர்களுகம் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்தின் மூலம் அஜித்துடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.

அண்மையில், இப்படத்தின் ஷீட்டிங் பணிகளை முடித்துவிட்டு அஜித் குடும்பத்துடன் அண்மையில் கோவா சென்றுள்ளார்.