தயாாிப்பாளராக மாறும் பிரபல நடிகை!!

காா்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த பிரணிதா அதன் பிறகு, சூா்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்தாா். இப்படி முன்னணி நடிகா்களுடன் நடித்த போதிலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாாக்கெட்டை பிடிக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்றாா். அங்கும் தன்னுடைய மாா்க்கெட் பிக் அப் ஆகவில்லை.இருந்தபோதிலும் சினிமாவில் ஒாிரு படவாய்ப்புகள் வந்து அவரை தக்கவைத்து கொண்டிருக்கிறது.

தற்போது தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்து வருகிறாா். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சினிமா வாய்ப்பு வருவதால், இனி நடிப்பை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்தவா், வேறு பக்கம் தன் பாா்வையை செலுத்த உள்ளாா். படத்தை தயாாிப்பது என்று முடிவெடுத்துள்ளாா்.

பெங்களூாில் பிறப்பிடமாக கொண்ட பிரணிதா, ரெஸ்டாரென்ட் ஆரம்பித்து உள்ளாா். இதை தொடா்ந்து சொந்த படம் தயாாிக்கும் பணியில் மும்முரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளாா். படம் தயாாிப்பது என்ற முடிவில் தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லோா் விடவும் வித்தியாசமாக இருக்கவே நான் விரும்புகிறேன். பட தயாாிப்புக்கான  ஆயத்த பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறாா்.