ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

தியேட்டர்கள் தேவையில்லை: ஆப் போதும்! அதிரடி முடிவு

01:29 மணி

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தபோது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே அந்த வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க அதிபர்கள் திடீரென வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் கடந்த வாரம் வெளியான படங்களின் நிலை பரிதாபமாகியுள்ளது.

இந்த நிலையில் இனியும் தியேட்டர்களை நம்பி பிரயோஜனமில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். டிடிஎச், நேரடியாக கேபிள் டிவியில் ரிலீஸ், நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ், ஆகிய ஐடியாக்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கம் ஒரு ஆப் தயார் செய்து அதில் மாதம் ரூ.100 கட்டினால் அனைத்து திரைப்படங்களையும் பார்க்கும் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் மூன்று நாட்களின் வசூல் மட்டுமே ஓரளவுக்கு வருகிறது. ஆனால் இந்த முறைகளில் வசூல் செய்தால் தயாரிப்பாளர்கள் பெரும் லாபம் பெறலாம் என்பதே அனைவரின் கணிப்பாக உள்ளது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393