சரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால்

தயாரிப்பாளர் சங்கம் குறித்து நடிகர் விஷால் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தானு, நடிகர் சங்கத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் குறித்து பல்வேறு புகார்களை விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 2ம் தேதி நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷால் அணி, டி.சிவா, கேயார் உள்ளிட்ட 5 அணிகள் போட்டியிடுகிறது. விஷால் அணியின் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விஷால் அணி பேசியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள், தி.நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், விஷாலை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தாணு “நடிகர் விஷால், தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றி இழிவான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. அவரால் பல வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். கால்ஷீட் கொடுக்கிறேன் எனகூறி பல தயாரிப்பாளர்களை அவர் ஏமாற்றியுள்ளார். அவருக்கு அரசியல் நப்பாசை ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டிக்க வேண்டும். நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் தகுதியற்றவர்” என ஆவேசமாக பேசினார்.