பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த படம்
‘இரும்புத்திரை’. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஷால்
இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட்
மேனனின் ‘அயோக்யா’ ஆகிய இரு திரைப்படங்களில்
நடித்து வருகிறார். ‘சண்டக்கோழி 2’ படமானது அக்டோபர்
18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர்
திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து, ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பும்
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமானது
அடுத்த ஆண்டு (2019) பொங்கலை முன்னிட்டு வெளியிட
திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்திலும் நடிக்க
உள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் ஜனவரி மாதம்
தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது, தெலுங்கில் நடிகை மஞ்சு ‘மேமு
சைத்தம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை நடிகர் விஷால் தமிழில் தொகுத்து
வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில்,
சன் டிவியில் இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ
வெளியிடப்பட்டுள்ளது. அதில் “விதைச்சவன் துாங்கலாம்…
விதைகள் துாங்காது… அன்னை விதைப்போமோ” என்று
கேள்வி எழுப்பியுள்ளார் விஷால்.

‘சன் நாம் ஒருவர்’ என பெயர் சூட்டப்பட்ட இந்நிகழ்ச்சியின்
2-வது புரொமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.