அரசாங்கத்தில் வேலை செய்யும் அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் சிறந்தவர்கள் என பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ சுரேந்தரா சிங் பேசியுள்ளார். பாலியல் தொழில் செய்பவர்களுடன் அரசு அதிகாரிகளை ஒப்பிட்டு பாஜக எம்எல்ஏ பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதில் பாஜக எம்எல்ஏ சுரேந்தரா சிங் பெயர் போனவர். இந்நிலையில் அவர் நேற்று தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, அரசு அதிகாரிகளைவிட பாலியல் தொழில் செய்பவர்க்கள் மேல். அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது பணிகளை செய்கிறார்கள், மேடையில் நடனமாடுகிறார்கள்.

ஆனால் அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள், பணியையும் செய்ய மறுக்கிறார்காள். பணி முடிவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என பேசி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் இவர் மேற்கு வங்க முதல்வ்வர் மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கை சூர்ப்பநங்கையுடன் ஒப்பிட்டுபேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.