நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடரந்து 2 படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது, பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து ‘ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 2வது படத்திலும் கைகோர்த்திருக்கிறார். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் காமெடி படமாக உருவாகிறது.

‘சீமராஜா’ படத்தைத் தயாரித்த ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோ சிவகார்த்திகேயனின் இன்னொரு படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். இதில் ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை நடித்து வரும் சிவகார்த்திகேயன், விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய மித்ரனுக்கு தற்பொழுது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படம் த்ரில்லா் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த புதிய த்ரில்லர் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.