விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் விக்ரம் வேதா.

இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், பல கோடி வசூலையும் வாரி குவித்துள்ளது. இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோரின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. வெளியான அனைத்து திரையரங்கிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இவர்கள் நடிகர் ஆர்யாவை வைத்து  ‘ஓரம்போ’படத்தை இயக்கினர். அதன் பின் மிர்சி சிவாவை வைத்து ‘குவாட்டர் கட்டிங்’ என்ற படத்தை இயக்கினர். அதன் பின் 7 வருடங்கள் கழித்து தற்போது விக்ரம் வேதா படத்தை இயக்கியுள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் அடுத்த படம் குறித்து சில தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமே அடுத்த படத்தையும் தயாரிக்கிறது. இரண்டு கதைகள் தயாராக இருப்பதாகவும், அதில் ஒன்றை இயக்க முடிவெடுத்திருப்பதாக புஷ்கர்-காயத்ரி தெரிவித்துள்ளனர்.