கோலிவுட்டை கலக்க மீண்டும் திரும்பும் கொக்கி குமாரு?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படம் தனுஷின் முக்கியமான படங்களில் ஒன்று. இந்த படத்தில் அவர் ஏற்று நடித்த கொக்கி குமாரு கேரக்டரின் பெயர் இன்றளவும் பிரபலம்

இந்த நிலையில் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும், ‘புதுப்பேட்டை 2’ படத்திற்கான திரைக்கதையை செல்வராகவன் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்கள் முடிந்தபின்னர் ‘புதுப்பேட்டை 2’ படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தனுஷே தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது