காதல் தின ஸ்பெஷல்: ஹரிஷ் ரைஸா படத்தின் பாடல் வெளியீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா நடிக்கும் படம் பியார் பிரேமா காதல். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் டீசா் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிக்பாஸ் ஹரிஷ் ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கா் ராஜா இசையமைத்தோடு அல்லாமல் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

கிரகணம் படத்தை இயக்கி இளன் தான் இந்த ரெமான்டிக் மற்றும் காமெடி கலந்த படத்தை இயக்கி வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தின் சிங்கள் டிராக் பாடல் வெளியாகியுள்ளது. வருகிற பிப்ரவரி 14ம் காதலா் தினத்தை முன்னிட்டு இந்த படக்குழு காதல் தின ஸ்பெஷலாக ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்திருந்தது. அதனால் இந்த சிங்கள் பாடல் வெளியிடாக வந்துள்ளது.