பியார் பிரேமா காதலுக்கு கடிதம் மூலம் விமர்சனமும் வாழ்த்தும் எழுதிய சுசீந்திரன்

யுவனின் தயாரிப்பிலும் இசையிலும் வெளிவந்த பியார் பிரேமா காதல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம். எளன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த படம் காதல், மோதல் என ஜாலியாகவும் யுவனின், பின்னணி இசை பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் படத்திற்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளன.

இந்த திரைப்படத்தை வாழ்த்தி இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதை டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். படத்தின் இயக்குனருக்கும் யுவனுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.