ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

07:03 காலை

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடைபெறவிருந்த இடைத் தேர்தலை தேர்தல் கமிஷன் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

ஜெ.வின் மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருந்தது. அதிமுக அணி இரண்டாக பிரிந்து தொப்பி சின்னத்தில் தினகரனும், இரட்டை மின் கம்பம் சின்னத்தில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும், திமுக சார்பில் மருது காணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் மற்றும் பலரும் போட்டியிட்டனர். தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நிலையில், அந்த தொகுதியில் தினகரன் அணியினர் ஒட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகிறது. சமீபத்தில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பது வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போக, தினகரன் அணியினர் பணம் கொடுப்பதை தட்டிக் கேட்ட திமுகவை சேர்ந்த சிலருக்கு கத்திக் குத்தும் விழுந்தது. மேலும், பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து புகார் வந்து கொண்டிருப்பதால், தேர்தலை நிறுத்திவிட தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

அந்நிலையில், 8ம் தேதி சுகாதரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர், எழும்பூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் அலுவலகம், நடிகரும் சமக தலைவருமான சரத்குமார் வீடு மற்றும் சில அமைச்சர்கள் வீடு உட்பட மொத்தம் 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.95 கோடி வரை பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்கள் சிக்கியது. எனவே, அந்த ஆதரங்களை வருமான வரித்துறையினர் தேர்தல் கமிஷனிடம் சமர்பித்தனர். எனவே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமிஷன் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது.

ரூ.89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்கள் சிக்கியுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில், ஆர்.கே.நகரில் நியாயமான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனவும், எப்போது எங்களுக்கு அங்கு நியாயமாக தேர்தல் நடைபெறும் என நம்புகிறமோ அப்போது அங்கு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பை மீண்டும் வெளியிடுவோம் என தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த வாக்களார்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

(Visited 30 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com