இந்திய சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐ-டே (I-Day) நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார் நடிகர் ஆர்.மாதவன்.

இது  குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “ஸ்வதேஸ் சுதந்திரதின விழாவில் விருந்தினராகப் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

பே ஏரியா இந்திய-அமெரிக்கர்கள் அசோசியேஷன்ஸ்(AIA) இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்கிறது” வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது 69வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகிறது. AIA என்பது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும், அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் சமூகத்தின் வளமான மற்றும் பல்வேறு பாரம்பரியத்தைப் அறிந்துகொள்ளவதற்கான ஒரு மன்றமாகச் செயல்படுகிறது.