டோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ஸ்ரீரெட்டி மிக விரைவில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களையும் தன்னிடம் உள்ள அந்தரங்க புகைப்படங்களையும் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷாவும் பாகுபலி வில்லன் ராணாவும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் வெளிவந்த ஒருசில நிமிடங்களில் ராணாவின் சகோதரர் அபிராமுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரெட்டிக்கு அபிராம் உதட்டு முத்தம் கொடுக்கும் இந்த புகைப்படன் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் ஸ்டுடியோவில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி பல முறை உறவு கொண்டதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறிவந்தார். தற்போது அந்த தயாரிப்பாளரின் மகனின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தற்போது அது பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம் தான் என்று ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அபிராம் உனக்கு வெட்கமாக இல்லையா? ஸ்டுடியோவில் என்ன செய்தாய் என்பது உனக்கே தெரியும். அதற்கான ஆதாரத்தையும் காண்பித்துவிட்டேன். தலித் மற்றும் பெண்கள் அமைப்புகள் முன்வந்து போராடி எனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அபிராமுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.