விஷ்ணு விஷால் நடிப்பில், ‘முண்டாசுப்பட்டி’ படத்தை
அடுத்து, ராம்குமார் இயக்கியுள்ள படம் ‘ராட்சசன்’. டில்லி
பாபு இப்படத்ததை தயாரித்துள்ளார்.

இப்படத்தில், விஷ்ணுக்கு ஜோடியாக அமலாபால்
நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 5-ல் திரைக்கு வர
உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  '96', 'ராட்சசன்' இரு படங்களையும் புகழ்ந்த பிரபல இயக்குநர் யார் தெரியுமா?

இந்நிலையில், செய்தியாளர்கள சந்தித்த இயக்குனர்
ராம்குமார், “’முண்டாசுப்பட்டி’ படத்துக்க பிறகு ‘ராட்சசன்’
கதையை 20 தயாரிப்பாளர்கள், 17 ஹீரோக்களிடம் சொல்லி
இருக்கிறேன். ஆனால், யாரும் என்னை நம்பி படம்
தயாரிக்கவும், நடிக்கவும் முன் வரவில்லை” என கூறி
வருத்தப்பட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  விஷ்ணு விஷால் ரெஜினா ஜோடி புதிய படம்

நடிகர் விஷ்ணு விஷால், “’முண்டாசுப்பட்டி’ படம்
பண்ணும்போதே இயக்குனர் ராமிடம், ‘ நாம் இன்னொரு
படம் பண்ணலாம்’ என்று கூறி இருந்தேன். அதற்கு
ராம்குமார், ‘கொஞ்ச காலம் ஆகும்’ என்றார். ஆனால் 4
ஆண்டுகள் ஆகும் என்று எனக்கு அப்போது தெரியாது. பல
தடைகளுக்குப் பிறகு என்னை தேடி வந்த கதை இது” என்று
கூறினார்.