பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் திடீரென பழ.கருப்பையாவின் கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இது நிஜத்தில் அல்ல, ஒரு திரைப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய்யின் 3வது கேரக்டர் இதுதான்: படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆம், விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தில் பழ கருப்பையா ஒரு கட்சியின் தலைவராகவும், அதே படத்தில் அவருடைய கட்சியின் தொண்டனாக ராதாரவி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

இரண்டு அரசியல்வாதிகளிடம் மோதும் கடினமாக கேரக்டர் என்பதால் விஜய்யின் கேரக்டர் இதைவிட வலுவாக இருக்கும் வகையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உருவாக்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.