Radharavi denying apology – நயன்தாரா விவகாரத்தில் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறி நடிகர் ராதாரவி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் தொடர்பான விழாவில் நயன்தாரா பற்றி ராதாரவி கீழ்த்தரமாக பேசிய விவகாரம் கடும் சர்ச்சையை எழுப்பியது. நெட்டிசன்கள், நடிகர், நடிகைகள் முதல் நயன்தாராவும் அதற்கு கண்டனம் தெரிவித்தார். இதனால், திமுகவிலிருந்தும் ராதாரவி நீக்கப்பட்டார்.

அதன் இந்த சர்ச்சை ஓய்ந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த விவகாரம் குறித்து ராதாரவி பேசியுள்ளார். ஒரு குறும்பட விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு சர்ச்சைகளை ராதாரவி பயப்படக்கூடாது அவரின் குடும்பத்தினருக்கே பயன் எனில் என்னவென்றே தெரியாது எனப்பேசினார்.

அவருக்கு பின் பேசிய ராதாரவி ‘எனக்கு எந்த பயமும் இல்லை. எனவே, யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை. நான் என்ன கொலையா செய்து விட்டேன்? நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. நான் நாடகத்திலிருந்து வந்தவன். அன்று நான் பேசியது தவறு எனில் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களே எனக்கு எதிர்பு தெரிவித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் கைதட்டினர்” என அவர் பேசினார்.