தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக்கூடாதா? ராதாரவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசிய பேச்சில் இருந்து அவர் விரைவில் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தனிக்கட்சி பெயர், கொடி அறிமுகப்படுத்த வேண்டியதுதான் பாக்கி என்ற நிலையில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும், அவர் கன்னடர், ஊழல்வாதி என்றும் ஒருசில அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ராதாரவி இதுகுறித்து கருத்து கூறியபோது, ”ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் வாக்குப்படி தான் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.

இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’ என்று கூறினார்