ராதிகா ஆப்தே தமிழ் படம் ஒன்றில் தன்னுடன் நடித்த பிரபல நடிகர் தவறாக நடந்த காரணத்தால் கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார்.

ராதிகா ஆப்தே ஏற்கனவே தயாரிப்பாளா் ஒருவா் தன்னை படுக்கைக்கு அழைத்தாக சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.நடிகைகள் பேச தயங்கும் பாலியல் தொல்லை, படுக்கைக்கு அழைப்பது பற்றி பயப்படாமல் துணிந்து பேசி வருபவா்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியை பழிவாங்குகிறதா தயாரிப்பாளர் சங்கம்

இவா் தமிழில் அஜ்மல் நடித்த வெற்றிச்செல்வன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, உலா உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழ்ச்சியில் அவா் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா ஆப்தே, தமிழில் சினிமாவில் நடிக்கும் போது ஒரு தென்னிந்திய நடிகா் ஒருவா் திடீரென என் பாதங்களை வருடினார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  கடற்கரையில் கவர்ச்சி உடையில் ரஜினி பட நாயகி

அந்த நடிகரை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை, அவா் என் பாதங்களை வருடியதும் அவரை நான் அறைந்து விட்டேன் என்று கூறினார். ராதிகா ஆப்தேவிடம் தவறாக நடந்து கொண்டு சப்புன்னு அறை வாங்கிய அந்த தமிழ் நடிகா் யாராக இருக்கும் என்று கேள்வி ரசிகா்கள் மத்தியில் எழுந்துள்ளது. சொல்லப்போன ராதிகாஆப்தே தமிழில் ஏறக்குறைய ஐந்து படங்களில் மட்டும் நடித்துள்ளார். அப்படி இருக்கும் ராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கிய பிரபல தமிழ் நடிகா் தான் யார் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனார்கள் ரசிகசிகாமணிகள்.

இதையும் படிங்க பாஸ்-  சிவகார்த்திகேயன் -அருண்காமராஜ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு