சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் விரைவில் வெளிவரவுள்ள அக்சயகுமாரின் ‘பேட்மேன்’ படத்திலும் நடித்துள்ளார்

இந்த நிலையில் ராதிகா ஆப்தே தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஒரு பல்லி ராதிகாவின் கன்னத்தில் உள்ளது. அந்த பல்லியை அவர் கடித்து சாப்பிட முயற்சி செய்கிறார்.

இந்த புகைப்படம் அருவருப்பை தருவதாக ஒருசிலரும், ஆச்சரியம் தருவதாக பெரும்பாலானோர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர்