தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும், சமுக ஆர்வலர்களும் இப்புயலுக்கு நிவாரண நிதியை அளித்தும், நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

வங்கக்கடலில் உள்ள கஜா புயலானது கடந்த 16ஆம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை பெரிதும் சேதப்படுத்தியது. அதில், புதுக்கோட்டை, துாத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், வேதாரண்யம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் மின்கம்பங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும், தென்னை மரங்கள் சாய்ந்தும் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனை தற்போது சீரமைக்கும் பணியில் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம், கஸ்துாரி உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவி செய்துவதாக அறிவித்துள்ளனர். அந்தவகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு இழந்த 50 மக்களுக்கு வீடு கட்டித்தருவதாக அறிவித்தார். அதில், முதலில் ஒரு வயதான பாட்டியின் வீட்டைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். அதில், அந்த பாட்டி  தனக்கு ஒரு கொட்டகை மட்டும் போட்டு தந்தால் போதும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தற்போது அந்த விடியோ வைரலாகி வருகிறது.