கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டு மொத்த மாநிலமும் சீர்குலைந்துள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த தேசமும் கேரளாவுக்கு உதவ ஒன்றாக கூடி நிற்கிறது. சாதி, மதம், இனம், வயது, தொழில் வித்தியாசமில்லாமல் அனைத்து தரப்பினரும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரபல தமிழ் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை அவர் இந்த நிதியை கேரள முதல்வரை சந்தித்து அளிக்க உள்ளார்.

ஏற்கனவே நடிகர் சங்கத்தினர், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், ரஜினி, கமல், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் கேரளாவுக்கு நிதியுதவி செய்தனர். அதில் அதிகபட்சமாக நடிகர் விஜய் 70 லட்சம் வழங்கியிருந்தார். தற்போது அவரைவிட அதிகமாக 1 கோடி ரூபாய் அளிக்க உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.