சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தாலும் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை, கட்சியின் பெயர் சின்னம் என எதையும் ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் இப்போதே ரஜினியை வருங்கால முதல்வர் என்று அறிவித்து வருகின்றனர்

இதுவாவது பரவாயில்லை, ஆனால் ரஜினியின் ரசிகன், ரஜினியின் வெறியன் என்று கூறிக்கொள்ளும் ராகவா லாரன்ஸ், தற்போது அரசியல் ரஜினியின் காவலன் என்று கூறி வருகிறார்.

ரஜினியின் கட்சியில் இணைந்து அமைச்சர் அல்லது துணை முதல்வர் பதவிக்கு ராகவா லாரன்ஸ் இப்போதே துண்டு போடுவதாக சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர்.