நடிகர், இயக்குனர், நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு உள்பட பல போராட்டங்களுக்கு அவர் ஆதரவு கொடுத்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது அரசியல் வருகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வரும் 4ஆம் தேதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவிக்கவுள்ளாராம். தீவிர ரஜினி ரசிகரான லாரன்ஸ், ரஜினி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தாயாருக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள ராகவா லாரன்ஸ் , அந்த கோவிலின் திறப்பு விழா தேதியையும் வரும் 4ஆம் தேதி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.