தமிழ் திரையுலகில் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 3’ என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார். இந்த படத்தில் ஓவியா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்

மேலும் ராகவா லாரன்ஸ் பல குழந்தைகளுக்கு உதவி செய்வதோடு, ஆதரவற்ற குழந்தைகள் பலரை தனது டிரஸ்ட் மூலம் வளர்த்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு வயதாக இருக்கும்போது இவரிடம் வந்து சேர்ந்த குழந்தைதான் நாகேஸ்வரி. இவரை சிரிப்பழகி என்றுதான் ராகவா லாரன்ஸ் கூப்பிடுவாராம்.

நாகேஸ்வரிக்கு இன்று பிறந்த நாள் என்றும் இவரை அனைவரும் வாழ்த்துங்கள் என்று ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது வேண்டுகோளை ஏற்று சிரிப்பழகி நாகேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.