கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இது போக பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்களாக விளங்கிய ஆடு, மாடு, கோழிகள் உயிரிழந்து விட்டன. நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.

எனவே, பல சமூக ஆர்வலர்களும், பொதுமக்கள் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். நடிகர்கள் பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வீடுகளை இழந்து நிற்கும் 50 விவசாயிகளுக்கு இலவசமாக வீடு கட்டிதருவது என நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு தனியார் தொலை காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்…

அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும்..மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும்…அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்…அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்… எனக்குறிப்பிட்டுள்ளார்.