ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தின் பேய் வெற்றியைத் தொடர்ந்து  ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’ ஆகிய படங்களும் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன. தற்போது மறுபடியும் ஒரு பேய் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் தயாராகி வருகிறார். இவருடைய அடுத்த படத்திற்கு ‘காஞ்சனா-3’ என்று பெயர் வைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் தனக்கு ஜோடியாக ‘முனி’ படத்தில் தன்னுடன் நடித்த வேதிகாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘காஞ்சனா-2’ படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே, தன்னுடைய அடுத்த படத்தை அவரே இயக்கி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.