lawrance

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும், தென்னை, வாழை மரங்கள் பல வேரோடு சாய்ந்தது. இதனால் டெல்பா பகுதிகளில் வாழும் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசு மற்றும் பல அமைப்புகள், திரை பிரபலங்கள் என பலர் உதவி புரிந்து வருகின்றனர்.

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இந்த புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களில் ஐம்பது பேருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், முதலில் ஒரு வயதான பாட்டிக்கு வீடு கட்டித்தர உள்ளார்.

இந்த நிலையில், சமூக சேவகரான ஆலங்குடி கணேசன் என்ற முதியவருக்கும் வீடு கட்டித்தர உள்ளார். இந்த முதியவர் யார் என்றால், ஆலங்குடி 515 கணேசன் என்றாலே அனைவருக்கும் அப்பகுதியில் பிரசித்து பெற்றவர். இவர் இதுவரை 500 அனாதை சடலங்களை தனது இலவச ஆம்புலன்ஸில் ஏற்றி, தகனம் மற்றும் அடக்கம் செய்பவர்.

இந்த சூழலில் இவரது வீடும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இதனையறிந்த ராகவா லாரன்ஸ் இவருக்கு பத்து இலட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டித்தர முடிவு செய்தார். இன்று காலை அதற்கான பூமி பூஜை பணி நடைபெற்றது. இதில் ராகவலா லாரன்ஸ் கலந்து கொண்டார்.

இவர் கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்தவர். இந்நிலையில், இவரது வீடு கஜா புயலால் பாதிக்கப்பட்டுது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் இந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் சென்றுவிட்டார். அவரை எல்லா வசதிகளுடன் வாழ வைத்து பார்க்க வேண்டும் வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும். அவரை என் தந்தை சானத்தில் வைத்து பார்க்கிறேன் என லாரன்ஸ் தெரிவித்தார்.