Connect with us

செய்திகள்

எனக்கு அரசியல் பிடிக்காது; எனது பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்: ராகவா லாரன்ஸ் பளீச்

Published

on

ராகவா லாரன்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றிருந்தார். கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கேள்விகளை எழுப்பினர். அப்போது, அவர் கூறும்போது, அனிதாவின் தற்கொலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை விமர்சிப்பவர்ளுக்கு காலம் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டு சென்றார்.

ஆனால், அவர் பாரதீய ஜனதா கட்சியை விமர்சித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘எனது ‘முனி 4’ படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள். சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்.

நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள். நானும் “காலம் பதில் சொல்லும்” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.காவுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்.

சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம். அரசியல் அல்ல. அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன். அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா? என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்15 hours ago

அசுரன் ’அசுர’ வெற்றி – 100 கோடி வசூல் சாதனை !

செய்திகள்15 hours ago

காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணைக் கொன்று எரித்த பெற்றோர் – மீண்டும் தலைதூக்கும் ஆணவக் கொலை !

police
செய்திகள்15 hours ago

பைக்கில் குழந்தைகள்.. அபராதம் விதித்த போலீசார்.. அதிர்ச்சி வீடியோ

செய்திகள்16 hours ago

பிகில் படத்திற்கு வந்த திடீர் சிக்கல் – சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

bigil trailer
சினிமா செய்திகள்21 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்21 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்22 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்22 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்7 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending