தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து, நடிகராகி, இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் பேய் படங்களை எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான்.

பேய் படம் என்றால் பயமுறுத்தும் என்பதை தாண்டி, சிரிப்பாகவும் இருக்கலாம் என்பதை டிரெண்டாக உருவாக்கியவர் ராகவா லாரன்ஸ். தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் காஞ்சனா 3 படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர், இந்தியில் பேய் படத்தை எடுக்கப்போகிறார்.

தமிழில், ராகவா லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா, சரத்குமார் நடித்த படம் காஞ்சனா. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படத்தை தான் ராகவா லாரன்ஸ் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது..