தமிழ் சினிமாவில் தற்போது வேகமாக முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்துவருபவர் நடிகை ரகுல் பிரீத்சிங். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த அவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று மாபெறும் வெற்றியை தந்தது.இதனைத் தொடந்து பல படங்கள் அவருக்கு கிடைத்தன. அதில் சூர்யா படமும் ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை அம்பாசமுத்திரம் பகுதியில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதனை அறிந்த ரகுல் அது ஒரு கிராமம, ஹோட்டல் வசதி கூட கிடையாது எனவே நான் அங்கு வந்து நடிக்க மாட்டேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வேறு வழியில்லாததால் அம்பாசமுத்திரம் போன்று செட் போட்டு படப்பிடிப்பை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் தயாரிப்பாளருக்கு ரூ.4 கோடி வரை தேவையில்லாத நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வளர்ந்துவரும் நிலையில் ரகுல் இவ்வாறு நடந்துகொள்ளலாமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறனர்.