தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரித்திசிங்கிற்கு தமிழில் கிடைத்தது ஏமாற்றம் தான்

முதல்படமான ‘தடையற தாக்க’ நல்ல வெற்றி பெற்றாலும் ரகுல் தமிழ் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படவில்லை. அதேபோல் பெரிதும் எதிர்பார்த்த ‘ஸ்பைடர்’ படமும் தோல்வி அடைந்துவிட்டது. மேலும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நல்ல வெற்றி பெற்றாலும், ரகுல் காட்சிகள் படத்திற்கு தேவையில்லை என்று பலரும் விமர்சனம் செய்தனர்

இந்த நிலையில் இனிமேல் தமிழ்ப்படமே வேண்டாம் என்றுமட்டும் ரகுல் முடிவெடுக்க, தமிழ்ப்பையனைக்கூட திருமணம் செய்ய மாட்டேன், என்னுடைய வருங்கால மாப்பிள்ளை தெலுங்கு பையனாகத்தான் இருக்க வேண்டும் என்று கடுப்புடன் கூறியுள்ளார்.