Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மாஸ் வில்லத்தனம் காட்டிய ரகுவரன் கமலுடன் இணையாத அதிசயம்

மாஸ் வில்லத்தனம் காட்டிய ரகுவரன் கமலுடன் இணையாத அதிசயம்

தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர்களுள் மிக முக்கியமான வில்லன் நடிகர்னா அவர் ரகுவரன் தான் என்னா நடிப்பு என்னா பெர்பார்மென்சு என பெரும்பாலான நடிகர்கள் ரசிகர்களை ஏங்க வைத்தவர்.

ஆரம்பத்தில் ஏழாவது மனிதன், ஒரு ஓடை நதியாகிறது என ரொமான்ஸ் மற்றும் அமைதி கலந்த படங்களில் நடித்து வந்த ரகுவரன் திடீர் அவதாரமாக வில்லன் வேடம் தரித்து ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என அந்நாளைய ஹீரோக்களுக்கு டெரர் வில்லனாக டஃப் கொடுத்தார் ரகுவரன் அவ்வப்போது கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

ரஜினி நடித்த ஊர்க்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா,அருணாச்சலம், முத்து மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் ரஜினிக்கு இவர் வில்லன். குறிப்பாக ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் இவர் ஏற்று நடித்த ஆண்டனி கதாபாத்திரம் இன்றும் ரகுவரன் மறைந்தும் மக்கள் மனதை விட்டு மறையாத கதாபாத்திரமாக இருக்கிறது.

முதல்வன் படத்தில் முதல்வராக அர்ஜூனுக்கு பேட்டிகொடுக்கும் காட்சியை அடித்துக்கொள்ள காட்சியே இல்லை அவ்வளவு மாஸான காட்சிகள் முதல்வனில் இடம்பெற்றிருக்கும். அர்ஜூனும் ரகுவரனும் நடித்த காட்சிகள் ரசிகர்களுக்கு மறக்காதவை ஒவ்வொரு வசனத்தையும் அந்நாட்களில் மட்டுமல்ல இன்றும் மனப்பாடமாக வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரகுவரன் நடித்த தியாகு என்ற திரைப்படம் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய கதை இது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவன் அதில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் கதை மிக பிரமாதமாக நடித்திருப்பார் ரகுவரன்.

படம் பார்க்கும் அப்பழக்கம் உடைய யாரும் சற்றாவது திருந்தவேணும் என நினைக்க வைக்கும் படம். இப்படம் வந்து சில வருடம் கழித்து, தூர்தர்ஷனில் இதே கதை ஒரு மனிதனின் கதை என்ற பெயரில் டிவி தொடராக வந்தது அதிலும் ரகுவரனே நடித்து மிகப்பெரும் வெற்றிபெற்றது.

வாய் பேச முடியா குழந்தையை கொல்ல கொலைவெறியுடன், உடல் ஊனமுற்றவராக இவர் நடித்த டெரர் படம் பூவிழி வாசலிலேயும்,

தத்து சென்ற குழந்தையை அந்த பெற்றோரிடம் மனநலம் பாதித்த தன் மனைவிக்காக திரும்ப கேட்கபோய் குழந்தையா மனைவியா அல்லது குழந்தையில்லாத எதிர்தரப்பு பெற்றோரா என ஏங்கும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பட காட்சிகள் ரகுவரன் ஒரு மிகப்பெரிய லெஜண்ட் என்பதை நிரூபிக்கும்.இயக்குனர் பாசில் இயக்கிய இந்த இரண்டு படங்களுமே ரகுவரன் நடிப்பில் வேற லெவல்.

ஒரு ஆங்கில வார்த்தையை வித்தியாச வித்தியாச மாடுலேசனில் பலமுறை பேசி பலத்த கைதட்டல் வாங்கியவர் ரகுவரனாகத்தான் இருக்க முடியும். பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் முதலில் இயக்கிய புரியாத புதிர் திரைப்படத்தில் வில்லத்தனமாக இவர் பேசிய ஐ நோ என்ற டயலாக் அந்த காலத்தில் ரொம்ப பேமஸ் டயலாக். ஐ நோ என்ற வார்த்தையையே 50க்கும் மேற்பட்ட கோணத்தில் வில்லத்தனமாக பேசி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் ரகுவரன்.

மிக அமைதியான குடும்ப படமாக சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம் ஏவிஎம் நிறுவனத்தார் தயாரித்த படத்தை நடிகரும் இயக்குனருமான விசு இயக்கினார். இதில்  வீட்டின் மூத்த பிள்ளையாக ஒரு சுயநலமுள்ள மனிதராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ஆஹா திரைப்படத்தில் ஒரு பாரம்பரியமான பிராமண குடும்பத்தின் மூத்தவனாக பிறந்து எல்லோரிடமும் பாசமாக இவர் நடித்திருந்தது கொள்ளை அழகு காட்சிகள்

விஜய்யுடன் நடித்த லவ் டுடே திரைப்படமும் ரகுவரனுக்கு ஒரு மைல்கல் திரைப்படம் பாசமான அப்பாவாக விஜய்க்கு வாழ்ந்து காட்டியிருப்பார் இப்படத்தில். அதே போல இளம் ஹீரோக்களுடன் இவர் அஜீத்துடன் நடித்த அமர்க்களம் படத்தையும் தனுஷ் உடன் நடித்த யாரடி நீ மோகினி படத்தையும் கூறலாம் அதுவே இவரின் கடைசி படமாக அமைந்தது.

இவரைப்பற்றிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும்பாலான ஹீரோக்கள், ஹீரோயின்கள், மற்றும் சின்ன சின்ன நடிகர்களுடன் நடித்த இவர் இப்போதிருக்கும் பல இளையதலைமுறை கலைஞர்கள் வரை இணைந்து நடித்த இவர்,30 வருடங்களுக்கும் மேல் நடித்த இவர் கமலஹாசனுடன் இணைந்தே நடிக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

இருவரும் சினிமாவின் மூத்த நடிகர்கள் நடிப்பு திறமையுள்ளவர்கள். தான் இறக்கும் வரை கமலஹாசனுடன் ரகுவரன் இணையவேயில்லை என்பது ஆச்சரியமூட்டும் வருத்தமான விஷயம்.